முதல்வர் பழனிசாமி: தொற்று குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்

முதல்வர் பழனிசாமி: தொற்று குறைந்தால்தான் பள்ளிகள் திறக்கப்படும்

1 mins read
a50c5604-c7c0-402b-849f-28371a8b8972
தமிழக முதல்வர் பழனிசாமி. கோப்புப்படம் -

சேலம்: கொரோனா கிரு­மித் தொற்று படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது. இருப்­பி­னும் இப்­ப­ர­வல் இன்­னும் அதிக அள­வில் குறைந்­தால்­தான் பள்­ளி­கள் திறக்­கப்­படும் என்று தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி அறி­வித்­துள்­ளார்.

சேலம் அஸ்­தம்­பட்டி ஆய்வு மாளி­கை­யில் அனைத்துத் துறை சார்ந்த அதி­கா­ரி­க­ளு­டன் முதல்­வர் நேற்று ஆய்வு மேற்­கொண்­டார்.

இதைத்­தொ­டர்ந்து, செய்தியா ளர்­க­ளி­டம் அவர் கூறு­கை­யில், "தமி­ழ­கத்­தில் கொரோனா முறி­ய­டிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்ள முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் தங்களின் உயிரை இழந்­தால் அவர்­க­ளின் குடும்­பத்­திற்கு ரூ.25 லட்­சம் நிவா­ரண நிதி வழங்­கப்­ப­டு­கிறது.

"கொரோனா சூழ­லி­லும் வளர்ச்­சிப் பணி­கள் தொய்­வின்றி நடை­பெற்று வரு­கிறது.

"இருப்பினும், இந்த கொரோனா பர­வல் குறைந்தால்­தான் பள்­ளி­கள் திறக்­கப்­படும். அப்போதுதான் பிள்ளைகளை பெற்றோர்கள் நிம்மதியாக பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியும்.

"மக்­க­ளின் ஒத்­து­ழைப்பு இல்­லா­மல் கொரோனா பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அர­சின் வழி­மு­றை­களை மக்­கள் பின்­பற்ற வேண்­டும்.

"கொரோனா தொற்­றுக்கு நம்­மி­டம் உள்ள ஒரே மருந்து சுய தனி­மை­தான். மத்­திய சுகா­தா­ரத் துறை­யின் கருத்­தைத்­தான் தமி­ழக அர­சும் வலி­யு­றுத்தி வரு­கிறது.

அத்­து­டன், இத்­தொற்­றில் இருந்து மீண்­ட­வர்­கள் பிளாஸ்மா தானம் செய்­வ­தற்­கும் முன்­வர வேண்­டும். மாநில அர­சின் நிலைப்­பாடு ஆங்­கி­லம், தமிழ் என்ற இரு­மொழி கொள்­கை­தான்," என்று முதல்வர் தெரிவித்தார்.