சுடச் சுடச் செய்திகள்

லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: லஞ்சம் வாங்கிக் கொண்டு இ-பாஸ் அனுமதியை முறையற்று வழங்கும் அதிகாரிகளை ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என்றும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா பரவலை முறியடிக்க, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில், அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஒரு மாவட்டத்தில் இருந்து மற் றொரு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள இ-பாஸ் அனுமதி கொடுக்கப்படுகிறது. இந்த இ-பாஸ் பெறுவதிலும் ஊழல் தலைவிரித் தாடுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படி லஞ்சம் பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்ட விரோதமாகப் பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த சிறுமிகளை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் நேற்று விசா ரணைக்கு வந்தது.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon