தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

2 mins read
b65da7ed-6206-4c50-b54e-056777b75cd4
தமிழகத்தின் தெற்குப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்­திற்கு கன­மழை பெய்­யும் என புவி­ய­ர­சன் எச்­ச­ரித்துள்­ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். எனினும் நீலகிரியில் ஒருசில பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளும் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. படம்: ஊடகம் -

நீல­கிரி: நீல­கிரி, கோவை, தேனி ஆகிய மாவட்­டங்­களில் உள்ளிட்ட ஆறு மாவட்­டங்­களில் கன­ம­ழை­யும் பெய்­யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

இது­கு­றித்து இம்­மைய இயக்­கு­நர் புவி­ய­ர­சன் வெயிட்டுள்ள அறிவிப்பில், "தென் மேற்கு பரு­வக்­காற்று மேற்­குத் தொடா்ச்சி மலைப்பகு­தி­களில் தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

"இதன்­கா­ர­ண­மாக, நீல­கிரி, கோவை, தேனி ஆகிய மாவட்­டங்களின் மலைச்­ச­ரிவு பகு­தி­களில் சூறைக்காற்­று­டன் கூடிய பலத்த மழை பெய்­யக்­கூ­டும்.

"சேலம், தர்­ம­புரி, கிருஷ்­ண­கிரி, ஈரோடு, திண்­டுக்­கல், வேலூா் ஆகிய மாவட்­டங்­களில் ஓரிரு இடங்களில் கன­மழை பெய்­யும்.

"தமி­ழக கட­லோர மாவட்­டங் களில் மித­மான மழை­ பெய்­யும். சென்­னை­யி­லும் அதன் புற­ந­கர்ப் பகு­தி­களும் மேக­மூட்டமாகவும் ஒருசில பகுதிகளில் குறைந்த அள விலும் மழை பெய்­யக்­கூ­டும்.

"தென்­மேற்கு, அர­பிக்­கடல் பகு­தி­களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்­தில் சூறைக்காற்று வீசும் என்­ப­தால் வரும் 11ஆம் தேதி வரை மீன­வர்­கள் மீன்­பி­டிக்கச் செல்­ல­வேண்­டாம்," என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே, குமரி மாவட்­டத் தில் சூறைக்­காற்­று­டன் நேற்று பலத்த மழை பெய்­தது. இத­னால் 'கும­ரி­யின் குற்­றா­லம்' என்று அழைக்­கப்­படும் திற்­ப­ரப்பு அருவி யில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது.

ஏற்­கெ­னவே மழை, வெள்­ளப் பெருக்கு, மண்­ச­ரிவு போன்ற பாதிப்­பு­க­ளின் கார­ண­மாக நீல­கிரி மாவட்ட மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை முடங்­கி­யுள்ளது.

இந்­நி­லை­யில், அடுத்த 24 மணி நேரத்­திற்கு நீல­கிரி மாவட்­டத்­தில் ஒரு­சில இடங்­களில் கன­மழை பெய்­யும் என புவி­ய­ர­சன் எச்­ச­ரித் துள்­ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். எனினும் நீலகிரியில் ஒருசில பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளும் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.