தமிழக முதல்வர்: கிருமிப்பரவல் முழுமையாகக் குறைந்தால்தான் போக்குவரத்துகள் இயங்கும்

தமிழக முதல்வர்: கிருமிப்பரவல் முழுமையாகக் குறைந்தால்தான் போக்குவரத்துகள் இயங்கும்

2 mins read
a70b70e8-505d-4c17-992a-8da53dda045f
தமிழக முதல்வர் பழனிசாமி. கோப்புப்படம் -

திரு­நெல்­வேலி: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று பர­வும் வேகம் முழு­மை­யா­கக் கட்­டுப்படுத்­தப்­பட்­டால்­தான் போக்குவரத்­துச் சேவை­கள் மீண்­டும் பழை­ய­படி இயங்­கத் தொடங்­கும் என்று தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

"போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள் முழு­வீச்­சில் இயங்­கும் தரு­வா­யில்­தான் இ-பாஸ் அனு­மதி முறை ரத்து செய்­யப்­படும். அந்த சூழ்­நி­லைக்கு தமி­ழ­கம் திரும்­பும் வரை, இ-பாஸ் அனு­மதி முறை ரத்து செய்­யப்­பட வாய்ப்­பில்லை," என்று முதல்­வர் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யுள்­ளார்்.

நெல்லை, தென்­காசி மாவட் டங்­களில் நிறை­வேற்­றப்­பட்ட சில திட்­டங்­க­ளுக்­கான திறப்பு விழா­வும் புதிய கட்­ட­டங்­க­ளுக்­கான அடிக்­கல் நாட்டு விழா­வும் நெல்லை ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் நடந்­தது.

இந்த விழா­வில் கலந்­து­கொண்ட முதல்­வர் திரு­நெல்­வேலி, தென்­காசி மாவட்­டங்­களில் ரூ.208.3 கோடி மதிப்­பிலான 8 புதிய பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­னார்.

அத்­து­டன் 31.04 கோடி மதிப்­பீட்­டில் நடந்து முடிந்­துள்ள 19 திட்­டப் பணி­க­ளை­யும் காெணாளிக் காட்சி வழி தொடங்கி வைத்­தார்.

இதைத்­தொ­டர்ந்து, விழா­வில் முதல்­வர் பேசி­னார். அவர் கூறுகை யில், "கொரோனா பாதிப்­பில் இருந்து குண­ம­டை­வோர் எண் ணிக்கை மற்ற மாநி­லங்­களை விட­தமி­ழ­கத்­தில் அதி­க­மாக உள்­ளது.

"வரும் 2021ஆம் ஆண்டு இறு திக்­குள் தாமி­ர­ப­ரணி ஆறு, நம்பி ஆறு, கரு­மேனி ஆறு நதி­நீர் இணைப்­புத் திட்­டம் நிறை­வே­றும்.

"தமி­ழ­கத்­தில் கொரோனா பரவ லைத் தடுக்க தீவிர நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. உட­னடியாக இந்த ஆண்டில் 500 ஆம்புலன்ஸ்­கள் வாங்கப்பட உள்ளன. இதற்­காக ரூ.103 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு உள்­ளது. ஆம்­பு­லன்­சில் வேலை செய்­யும் பணி­யா­ளர்­க­ளுக்கு தலா ரூ.5,000 ஊக்­கத்­தொகை வழங்­கப்­படும்.

"கொரோனா தாக்­கம் முழுமையாகக் குறைந்­த­பி­ற­கு­தான் போக்கு­வ­ரத்­து சேவை­ தொடங்­கப்­படும்.

"இ-பாஸ் நடை­மு­றையை எளி­தாக்கி உள்­ளோம். அத்­தியாவசி­ய பணி­க­ளுக்­காக விண்­ணப்­பித்­தால் உட­ன­டி­யாக அனு­மதி வழங்­கப்­படும்," என்றார் முதல்­வர்.

முன்பு மண்டல வாரியாக பேருந்துகளை இயக்கினோம். ஆனால், கிருமிப் பரவல் கூடிவிட்டது. அதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இனி தொற்று குறைந்த பிறகே இதைத் தொடங்குவது குறித்து ஆலோசிப்போம்.