8வது முழு ஊரடங்கு; தொற்று குறைகிறது

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 8வது முறையாக தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் தொற்று 1,000க்கும் கீழ் குறைந்து விட்டது.

இருந்தாலும் ஒவ்வொரு நாளும் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது.

இதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது.

சென்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜூலை மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமை களிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு அரசு உத்தரவிட்டது.

இதன்படி நேற்று ஞாயிற்றுக் கிழமை அன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

முழு ஊரடங்கில் மருந்து, பால் கடைகள், மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் உரிய காரணங்களுக்காகவும் வெளியில் வர அனுமதி உண்டு.

சரியான காரணம் இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வந்தால் அந்த வாகனங்களையும் போலிசார் பறிமுதல் செய்கின்றனர்.

சென்னையில் கடந்த ஜூன் 21, 28, ஜூலை 5, 12, 19, 26 மற்றும் இம்மாதம் 2ஆம் தேதியுடன் ஏழு முறை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் நேற்று 8வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று சென்னையின் அனைத்து பகுதிகளிலும் போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றியதாக இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசிய சேவை களான மருத்துவமனைகள், மருந்த கங்கள், பால் நிலையங்கள், மருத்துவ அவசர வாகனங்கள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப் பிட்ட சில சேவைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன.

அந்த வகையில் மாநகராட்சி களில் சிறிய வழிபாட்டுத் தலங்களை நாளை (திங்கட்கிழமை) திறக்கலாம் என தமிழக முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!