நான்கு தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் பலி

நான்கு தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் பலி

1 mins read
6bfb8710-460f-4b59-910e-eb208ed236c8
-

சென்னை: ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படித்துவந்த நான்கு தமிழக மாணவர்கள் வோல்கா நதியில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை மாணவர் ஸ்டீபன் லெபாக், தாராபுரம் முகமது ஆஷிக், திட்டக்குடி ராமு விக்னே ஷ், மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் ரஷ்யா வின் ஓல்கொ கார்ட் பகுதியில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்தனர்.

மருத்துவப் பல்கலை க்கழக விடுதியில் இதர தமிழக மாணவர்களுடன் தங்கி இருந்த இவர்கள் , நேற்று அங்குள்ள வோல்கா நதியில் 10க்கும் மே ற்பட்ட தமிழக மாணவர்களுடன் குளிக்கச் சென்றனர்.

அப்போது மாணவர் ஒருவர் நீரில் அடித்துச் செல்வதை பார்த்த ஸ்டீபன் , அவரைக்காப் பாற்ற முயன்றபோது அவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக் கண்ட மேலும் இரு மாணவர்களும் அவர்களைக் காப் பாற்றும் முயற்சியில் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.