நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்; 45 பேராக உயர்ந்த உயிரிழப்பு

நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்; 45 பேராக உயர்ந்த உயிரிழப்பு

2 mins read
16231987-f531-43ab-ba70-9e88f964e583
மண்சரிவில் புதைந்து கிடக்கும் சடலங்களை மீட்கும் மீட்புப் படையினர். படம்: இபிஏ -

மூணாறு: கேரள மாநி­லம், மூணாறு பகு­தி­யில் ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் சிக்கி உயி­ரி­ழந்த 16 பேரின் உடல் கள் நேற்று அழு­கிய நிலை­யில் மீட்­கப்­பட்­டன. இவர்­க­ளை­யும் சேர்த்து பலி எண்­ணிக்கை 45 ஆக உயர்ந்­துள்­ளது.

மூணாறு பகு­தி­யில் உள்ள பெட்டி­மடி என்ற இடத்­தில் கடந்த 7ஆம்­தேதி அதி­கா­லை­யில் கன மழை கார­ண­மாக திடீரென ஏற்­பட்ட பயங்கர­மான நிலச்­ச­ரி­வில் 25 வீடு­கள் மண்­ணில் புதைந்­தன.

வீட்டில் இருந்த 80க்கும் மேலான தொழி­லா­ளர்­களும் குடும்ப உறுப் பினர்களும் சிக்­கிக்கொண்­ட­னர்.

இந்நிலையில், இந்த 80 பேருமே தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள்­தான் என்­றும் இவர்­களை மீட்­கும் பணி­களில் கேரள அரசு பாகு­பாடு காட்­டு­வ­தாகவும் குற்­றச்­சாட்டுகள் கூறப்­பட்டு வருகின்றன.

மண்சரிவில் புதையுண்டு இறந்த 45 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் உடல் களைத் தேடும் பணியும் தொடர் வதால் பலி எண்­ணிக்கை மேலும் உய­ரும் என்­று அஞ்­சப்படு­கிறது.

பெட்­டி­முடி பகு­தி­யில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­வ­தால் மீட்­புப் பணி­யில் தொய்வு ஏற்­பட்­டுள்­ளது. 4வது நாளாக நேற்று திங்­கட் கிழமை அன்­றும் மீட்­புப் பணிகள் தொடர்ந்து நடை­பெற்­றன.

ராட்­சத பாறை­கள் மண்­ணு­டன் கலந்து கிடப்­ப­தால், உடல்­களை கண்­டு­பி­டிப்­ப­தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மூணாறு அருகே உள்ள ராஜ மலை, பெட்­டி­முடி மலைக் கிரா மங்­களில் உள்ள தேயி­லைத் தோட்­டங்­களில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஏரா­ள­மான தொழி­லா­ளர்­கள் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர். இவர்­கள் கயத்­தாறு, சங்­க­ரன் கோவில், ராஜ­பா­ளை­யம், புளி­யங்குடி, தென்­காசி, பாஞ்­சா­லங்­கு­றிச்சி, சென்­னை­ பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

நிலச்­ச­ரி­வில் சிக்கிய ஒரே குடும்பத்­தைச் சேர்ந்த 31 பேர்

பெட்­டி­முடி நிலச்­ச­ரி­வில் சிக்­கி­ய­வர்­களில் 31 பேர் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர்.

பெட்­டி­மு­டி­யைச் சேர்ந்த அனந்­த­சி­வனும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் அடுத்­த­டுத்த வீடு­களில் வசித்து வந்­த­னர். அனந்­த­சி­வன் (58), அவ­ரு­டைய மனைவி வேலுத்­தாய் (55), மகன் பார­தி­ராஜா (35), மரு­ம­கள் ரேகா (26) உள்­பட அந்த குடும்­பத்­தைச் சேர்ந்த 31 பேர் நிலச்­ச­ரி­வில் சிக்கி மண்­ணில் புதைந்­த­னர்.