சுடச் சுடச் செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலிஸ் அதிகாரி பால்துரை மரணம்

சென்னை: சாத்­தான்­கு­ளம் காவல்­நி­லை­யத்­தில் தந்தை-மகன் உயி­ரி­ழந்த வழக்­கின் தொடர்­பில் கைதான துணை போலிஸ் அதி­காரி பால்­துரை கொரோனா கிரு­மித் தாக்­கத்­தால் உயி­ரி­ழந்­தார்.

சாத்­தான்­கு­ளத்­தில் வர்த்­த­கர் ஜெய­ரா­ஜும் அவ­ரது மகன் பென்­னிக்­சும் போலிஸ் விசா­ர­ணை­யின்­போது அடித்­துக் கொல்­லப்­பட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. இச்­சம்­ப­வம் நாட்டு மக்­க­ளி­டம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்த, பல பக்­கங்­களில் இருந்­தும் சமூக வலைத்­த­ளங்­கள், ஊட­கங்­கள் வழி கண்­ட­னக் குரல்­கள் வெடித்­தன. பல இடங்­களில் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்­டன.

இதற்­கி­டையே, இந்த வழக்கை தாமாக முன்­வந்து விசா­ரிக்­கத் தொடங்­கி­யது சென்னை உயர்­நீதி­மன்­றத்­தின் மதுரை கிளை.

இத­னை­ய­டுத்து, இவ்­வ­ழக்கை முத­லில் சிபி­சி­ஐடி போலி­சார் விசா­ரித்­த­னர். அதன்­பின்­னர் சிபிஐ அதி­கா­ரி­க­ளிடம் இவ்வழக்கு கைமா­றி­யது.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் இருந்து மது­ரைக்கு வந்­துள்ள எட்டு சிபிஐ அதி­கா­ரி­களில் ஆறு பேருக்கு கிருமி தொற்­றி­ய­தால், அவர்­கள் தற்­போது மதுரை ரயில்வே மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

பால்­து­ரை­யு­டன் ஒரே சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள தலைமை காவ­லர் முரு­கன், முத்­து­ராஜ் ஆகி­யோ­ருக்கு கொரோனா தொற்று உறு­தி­யா­னதை அடுத்து, இவர்­க­ளைக் காவ­லில் எடுத்து விசா­ரித்த சிபிஐ அதி­கா­ரி­க­ளுக்­கும் தொற்று பர­வி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இவ்­வ­ழக்­கின் தொடர்­பில் துணை போலிஸ் அதி­காரி பால்­துரை உள்­ளிட்ட 10 போலி­சார் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர். இவர்­களில் பால்­துரை சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­த­து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon