சுடச் சுடச் செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 244,000 பேர் குணமடைந்தனர்; 5,041 பேர் உயிரிழப்பு 3 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

சென்னை: தமி­ழ­க மாநிலத்தில் கொரோனா கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை முதல்­மு­றை­யாக மூன்று லட்­சத்­தைக் கடந்துள்ளது.

ஒருபக்கம் பாதிப்பு இப்படி மூன்று லட்சத்தைக் கடந்தாலும் மறுபக்கம் குணமடைந்தோர் எண் ணிக்கை 250,000 பேரை நெருங்கி வருவதால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

திங்­கள்­கி­ழமை ஒரே­ நா­ளில் 5,914 பேரிடம் இத்­தொற்று பரவி இருந்­தது பரிசோதனையில் உறுதி யானது. இவர்­க­ளை­யும் சேர்த்து மாநிலத்தில் இதுவரை 302,815 பேர் இந்­தக் கிரு­மித்­தொற்­றால் பாதிப்­புக்கு ஆளாகி உள்­ள­னர்.

அத்துடன், கொவிட்-19 உயி­ரி­ழப்பும் 5,041 ஆக உயர்ந்­துள்­ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்டுள்ள அறிக்கையில், “தமி­ழ­கத்­தில் இதுவரை 244,675 பேர் கொரோனா கிருமிப் பரவலில் இருந்து குண­ம­டைந்து வீடு திரும்பி யுள்­ள­னர். அதா­வது, நோய்த்­தொற்­றால் பாதிக்கப்பட்டவர்­களில் 80% மக்­கள் குண­ம­டைந்­துள்­ள­னர்.

“தமி­ழ­கத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 302,815 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இங்குள்ள 130 ஆய்­வ­கங்­கள் மூல­மாக இது­வரை 32,92,958 பேருக்கு கொவிட்-19 பரி­சோ­தனை பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

“தற்­போது மாநிலத்தில் 53,099 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர்.

“சென்­னை­யில் தொடர்ச்­சி­யாக கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது. சென்­னை­யில் திங்கட்கிழமை ஒரே நாளில் 976 பேரிடம் இத்தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. அங்கு, தற்­போது இந்த பாதிப்­புக்குள்ளான 11,328 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்றனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர் களைக் கண்காணிக்க ‘அம்மா கொவிட் ஹோம் கேர்’ திட்டத்தை விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது தமிழக அரசு. இத்திட்டம் அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

 

பிரதமரிடம் ரூ.3,000 கோடி கேட்டுள்ள முதல்வர்

புதுடெல்லி: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் அவர் விவரம் கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனையின்போது, “கொரோனா கிருமி முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,000 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கவேண்டும், நவம்பர் மாதம் வரை தமிழக மக்களுக்கு ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும், மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடி ஒதுக்க வேண்டும், தேசிய பேரிடர் மீட்பு நிதி யில் இருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை வழங்க வேண் டும்,” என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon