புதுக்கோட்டை: கட்டைப் பையில் வீசப்பட்ட சிசு

புதுக்­கோட்டை: தமிழ்­நாட்­டில் உள்ள துணிக்­க­டை­களில் ஒரு­வர் ரூ.1,000க்கு மேல் செலவு செய்­தால் கட்­டைப் பை என்ற துணிப் பைகள் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும். இந்த கட்­டைப் பைக்­குள் போட்டு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை (படம்) வீசப்­பட்­டுள்­ளது.

புதுக்­கோட்டை மாவட்­டம், ஆல­டிக்­கொள்ளை பேருந்து நிலையத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு கட்­டைப் பைக்­குள் இருந்து குழந்­தை­யின் அழு­கு­ரல் கேட்­டது. அவ்­வழி­யாக வந்­த­வர்­கள் பையைப் பிரித்­துப் பார்த்­த­போது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அழு­த­படி முண்­டிக்கொண்டு இருந்­தது.

புதுக்­கோட்டை அரசு மருத்­துவ மனை­யில் குழந்­தைக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. நேற்று முன் தினம் ராணிப்­பேட்டை மாவட்­டம், வன்­னி­வேடு அருகே உள்ள அகத்­தீஸ்­வ­ரர் கோவி­லில் இதுபோல் மற்றொரு குழந்தை மீட்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!