அனைத்து பள்ளிகளிலும் வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை

அனைத்து பள்ளிகளிலும் வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை

2 mins read
0ff4a1d4-c4a7-48ea-8dbd-d538ea01898b
-

சென்னை: தமி­ழ­கத்­தில் அர­சுப் பள்­ளி­கள் உள்­பட அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் ஆகஸ்ட் 17ஆம் தேதி திங்­கள்­கி­ழமை முதல் 2020-2021ஆம் கல்வியாண்­டுக்­கான மாணவா் சோ்க்கை நடை­பெ­றும் என பள்­ளிக் கல்­வித்­துறை அமைச் சா் செங்­கோட்­டை­யன் தெரி­வித்­துள்­ளார்.

"ஆனால், பள்­ளி­க­ளைத் திறப்­பது மட்­டும் இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்லை," என்­றும் செங்­கோட்­டை­யன் உறு­தி­யு­டன் கூறி­யுள்­ளார்.

பள்­ளி­களில் மாண­வர் சேர்க்கை நடை­பெ­றும் நாளன்றே விலை­யில்லா பாடப்­புத்­த­கங்­கள், நோட்டு புத்­த­கங்­கள் பாதுகாப்பு நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்றி வழங்­கப்­பட உள்ளன.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தாக்கத்தை முறி­ய­டிக்க, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்­கம் அறி­விக்­கப்­பட்­டது.

அது­மு­தல் பள்ளி, கல்­லூ­ரி­கள் உட்­பட அனைத்து கல்வி மையங்­களும் மூடப்­பட்­டுள்­ளன. மாண­வர்­களும் பெற்­றோ­ரும் கல்வி நிலை­யங்­கள் எப்­போ­து­தான் திறக்­கப்­படும் என்ற கேள்­விக்­கான பதிலை எதிர்­பார்த்துக் காத்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் வரும் 31ஆம் தேதிவரை பொது­மு­டக்­கம் நடப்­பில் இருப்பதால், அதன்­பின்னர் பள்ளி, கல்­லூரி­கள் திறக்­கப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்­பு நில­வி வந்தது.

இந்நிலையில், சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் பேசியபோது, "தமி­ழ­கத்­தில் கொரோனா தாக்­கம் இன்­னும் தணி­ய­வில்லை. எனவே, தற்­போது பள்ளிகளைத் திறக்க இய­லாது.

"பெற்­றோர், கல்வியாளர்­க­ளின் கருத்­து­க­ளை அறிந்த பிற­கும் கொரோ­னா­வின் தாக்­கம் குறைந்­த­பி­ற­கும்­தான் பள்­ளி­க­ளைத் திறப்­பது குறித்து ஆலோ­சிக்க வேண்­டும் என்று அனைத்து துறையின ருக்கும் முதல்­வர் பழ­னி­சாமி ஆலோ­சனை வழங்கி இருக்­கி­றார்.

"பள்ளி திறக்­கப்­படும் தேதி குறித்து முதல்­வர்­தான் முடி­வு­களை அறி­விப்­பார். முதல்­வர் தலை­மை­யி­லான நிபு­ணர் குழு­வி­னர் முடிவு செய்து அறி­விக்­கும் வரை, பள்­ளி­களைத் திறப்­ப­தற்­கான சாத்­தியக் கூறு­களே இல்லை," என்றார்.

இத­னால், அடுத்த மாத­மும் பள்ளிகளைத் திறப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரி­கிறது.

"டிசம்­பர் வரை­யில் பள்­ளி­க­ளைத் திறப்­பது குறித்து எந்த முடி­வும் எடுக்­கப்­ப­டாது," என மத்­திய அர­சின் மனி­த­வள மேம்­பாட்டு அமைச்­ச ­க­மும் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­துள்­ளது.

மாணவர் சேர்க்கை துவங்கினா லும் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்