பாதிப்பை மிஞ்சியது குணமானோர் எண்ணிக்கை

பாதிப்பை மிஞ்சியது குணமானோர் எண்ணிக்கை

1 mins read
406f2406-205f-4973-b76a-6ab3d73020c0
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 986 பேருக்கு தொற்று இருந்தது உறுதியானது. அத்துடன் ஒரேநாளில் 6,005 பேர் இந்தக் கிருமி பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 250,680 பேர் குணமடைந்துள்ளனர். படம்: ஏஎப்பி -

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களை விடவும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மேலும் 5,834 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் மொத்தம் 308,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 111,054 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 986 பேருக்கு தொற்று இருந்தது உறுதியானது.

அத்துடன் ஒரேநாளில் 6,005 பேர் இந்தக் கிருமி பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 250,680 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 5,159 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இத்தொற்றின் காரணமாக 2,350 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.