பாடலாசிரியர் முத்துசாமி காலமானார்

பழம்பெரும் பாடலாசிரியரும் தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.

கடந்த 1958ல் வெளியான ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ உள்ளிட்ட படங்களில் கருத்துள்ள பாடல்களை எழுதியுள்ளவர் முத்துசாமி.

‘மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?’ என்ற பாடல் ஒரு காலத்தில் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஏராளமான வெண்பா, நூல்கள், கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவரை, வெண்பா கவிஞர் என்று தமிழார்வலர்கள் போற்றினர்.

இந்நிலையில் முதுமை, உடல்நலக் குறைவால் அவர் காலமானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon