ஒரே நாளில் 5,871 பேருக்கு தொற்று; 119 பேர் பலி

ஒரே நாளில் 5,871 பேருக்கு தொற்று; 119 பேர் பலி

1 mins read
c19b441e-585c-4bcb-ba86-93a4480d3275
நேற்று 8வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று சென்னையின் அனைத்து பகுதிகளிலும் போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். படம்: ஏஎப்பி -

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை ஒரேநாளில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரேநாளில் 119 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கிருமிப் பரவலால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 314,520 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,278 ஆகவும் உயர்ந்துள்ளது.

சென்னையில் 6வது நாளாக புதன்கிழமை ஆயிரத்துக்கும் குறைவாக 993 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 112,059 ஆக அதிக ரித்துள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 5,633 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இதுவரை மொத்தம் 256,313 பேர் குண மடைந் துள்ளனர்.