தனது தேர்ச்சியை சுவரொட்டி போல் வெளியிட்ட மாணவர்

கட­லூர்: தான் பெற்ற தேர்ச்­சியை மாண­வர் ஒரு­வர் வித்­தி­யா­ச­மாக ஃபேஸ்புக்­கில் சுவரொட்டி போல் (படம்) வெளியிட்­டுக் கொண்­டாடியுள்­ளார்.

கட­லூர் மாவட்­டம், காட்­டு­மன்­னார் கோயி லைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மாண­வர், தான் பத்­தாம் வகுப்­பில் அடைந்துள்ள தேர்ச்சியை மகிழ்ச்­சியுடன் தெரி­விக்­கும் வித­மாக ஒரு சுவ­ரொட்­டியை வடி­வ­மைத்து அதை ஃபேஸ் புக்­கில் பதி­வேற்றி உள்­ளார்.

அதில், “என்­னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ஆசி­ரி­யர்­களுக்கு இந்த வெற்­றி­யைச் சமர்ப்­பிக்கிறேன்,” என்று குறிப்­பிட்­டுள்­ள­வர், என்­னைத் தேர்ச்சி அடைய வைத்து வர­லாற்­றுச் சாத­னை செய்­துள்ள தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்­கு நன்றி எனவும் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தாக்­கத்தை முறி­ய­டிக்க, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொது­மு­டக்­கம் அறி­விக்­கப்­பட்­டது.

அது­மு­தல் பள்ளி, கல்­லூ­ரி­கள் மூடப்­பட்­டுள்­ளன. பத்­தாம் வகுப்பு தேர்­வும் ரத்து செய்­யப்­பட்டு மாண­வர்­கள் அனை­வ­ரும் தேர்ச்சி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon