திமுகவில் இருந்து கு க செல்வம் நிரந்தர நீக்கம்

சென்னை: திமுக சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் கு.க.செல்­வம் திமு­க­வின் அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளார். இதற்­கான அறி­விப்பை திமுக தலை­வர் ஸ்டா­லின் வெளி யிட்­டுள்­ளார்.

இது­கு­றித்து திமுக தலை­வர் ஸ்டா­லின் வெளி­யிட்­டுள்ள அறி­விப்­பில், “திமுக தலைமை நிலைய அலு­வ­ல­கச் செய­லா­ளர், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் பொறுப்­பு­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப் பட்ட கு.க.செல்­வம் திமுக கட்­சி­யின் கட்­டுப்­பாட்டை மீறி­யும் கட்­சிக்கு அவப்­பெ­யர் ஏற்­படும் வகை­யி­லும் செயல்­பட்டு வந்­தார்.

“அத்­து­டன், அவ­ரி­டம் கேட்­கப் பட்ட விளக்­கத்­திற்கு அவர் அளித்த பதில் ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில் இல்­லாத கார­ணத்­தால், அவர் அடிப்­படை உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்­துப் பொறுப்­பு­க­ளி­லி­ருந்­தும் நிரந்­த­ர­மாக நீக்­கப்­ப­டு­கி­றார்,” என்று ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

ஸ்டா­லி­னுக்கு நெருக்­க­மான இவர் திமுக மாவட்­டச் செய­லாள ராகப் பல­முறை முயன்­றார். ஜெ. அன்­ப­ழ­கன் வலு­வாக இருந்­த­தால் இவ­ருக்கு வாய்ப்­புத் தட்­டிப்­போ­னது.

இந்­நி­லை­யில் ஜெ.அன்­ப­ழ­கன் மறை­வுக்­குப் பின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்­பா­ளர் வாய்ப்பு தனக்­குக் கிடைக்­கும் என எதிர்­பார்த்­தி­ருந்த நிலை­யில், சிற்­ற­ரசு நிய­மிக்­கப்­பட்­டார்.

இத­னால் அதி­ருப்­தி­யில் இருந்த கு.க.செல்­வம், தமி­ழக பாஜக தலை­வர் முரு­கன் மூலம் பாஜக தேசி­யத் தலை­வர் ஜே.பி.நட்­டாவை அண்­மை­யில் டெல்­லி­யில் சந்­தித்­தார். இந்த சந்­திப்பு தமி­ழக அர­சி­ய­லில் விவா­தத்­தை­யும் சல­ச­லப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யது.

பாஜக தலை­வரை சந்­தித்­த­தும் உட­ன­டி­யாக கட்­சி­யில் இருந்து கு.க செல்­வத்தை இடை­நீக்­கம் செய்த திமுக தலைமை, உங்­களை ஏன் நீக்­கக் கூடாது என்று விளக்­கம் கேட்­டது.

இதற்கு கு.க செல்­வம் தரப்­பில் விளக்­க­மும் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யில், கு.க செல்­வம் அளித்த விளக்­கம் ஏற்­றுக்­கொள்­ளும்படி இல்லை எனக் கூறி கட்­சி­யில் இருந்து நிரந்­த­ர­மாக நீக்­கப்­பட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!