வட்டிக் கொடுமை; எழுவரின் தீக்குளிப்பு முயற்சி முறியடிப்பு

தூத்­துக்­குடி: வட்­டிக் கொடு­மை­யால் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஏழு பேர் நேற்று தூத்­துக்­குடி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தின் முன் தீக்­குளிக்க முயன்­ற­னர். அவர்­களை தடுத்து நிறுத்திய போலிசார், அவர்­கள் மீது தண்­ணீரை ஊற்றி காப்­பாற்றி உள்­ள­னர். பின்­னர் அவர்­களை மீட்டு சிப்­காட் போலிஸ் நிலையத்­துக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

தூத்­துக்­குடி மாவட்­டம் ஏரல் அருகே உள்ள சூளை­வாய்க்­கால் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் கணே­சன். இவர் அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரி­டம் கடந்த 4 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வீட்டு பத்­தி­ரத்தை அட­மா­னம் வைத்து ரூ.3 லட்­சம் கடன் வாங்கி, அதற்கு வட்­டி­யு­டன் சேர்த்து ரூ.7 லட்­சத்தை கணே­சன் செலுத்தி விட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. அதன்­பி­ற­கும் அவர்கள் வீட்டு பத்­தி­ரத்தை கொடுக்­கா­மல் வட்டி கேட்டு மிரட்­டி­யுள்­ள­னர்.

இது­கு­றித்து கணே­சன் ஏரல் போலி­சில் பல­முறை புகார் அளித்­தும் போலி­சார் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்கவில்லை.

இத­னால் மனம் உடைந்த கணே­சன், அவ­ரு­டைய மனைவி வேளாங்­கண்ணி, மகள் வெட்­கா­ளி­யம்­மாள், நட்­டார், மகன் செந்­தில்­கு­மார், இரு கைக்­கு­ழந்­தை­கள் ஆகிய 7 பேரும் மண் ணெண்ணெய்யை தலை­யில் ஊற்றி தீக்­கு­ளிக்க முயன்­ற­னர்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon