உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் வலியுறுத்து

சென்னை: மூளைத் தண்­டுச் சாவு அடைந்த ஒரு­வ­ரின் உறுப்­பு­களைத் தானம் அளித்து எட்டு பேரின் உயிர்­க­ளைக் காப்­பாற்ற முடி­யும்.

எனவே, மக்­கள் அனை­வ­ரும் உடல் உறுப்பு தானத்­தின் மகத்துவத்தை உணர்ந்து, அதன்­படி உடல் உறுப்பு தானம் செய்ய மக்­கள் முன்­வர வேண்­டும் என்று தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழனிசாமி வலி­யு­றுத்தி உள்­ளார்.

“இந்த ஒப்­பற்ற தானத்­தின் மூலம் இறந்­த­பி­ற­கும் நாம் உயிர் வாழ­லாம்,” என்­றும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

உடல் உறுப்பு தானத்தை ஊக்கு­விக்­கும் வகை­யில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13ஆம் தேதி அனைத்­து­லக உடல் உறுப்பு தான தினம் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

நேற்­றைய இந்த தினத்­தில் முதல்­வர் பழ­னி­சாமி அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார்.

அதில், “இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­த­லாக தமி­ழ­கத்­தில் கடந்த 2014ஆம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணை யம் என்ற அமைப்பை அம்மா ஜெய­ல­லிதா உரு­வாக்கினார்.

“அந்த அமைப்­பின் பல­னாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சை­யில் முன்­னோடி மாநில மாக தமி­ழ­கம் விளங்கி வருகிறது.

“தமி­ழ­கத்­தில் இது­வரை 1,382 கொடை­யா­ளர்­க­ளி­டம் இருந்து 8,163 உடல் உறுப்­பு­கள் தான­மாகப் பெறப்­பட்டு உள்­ளன.

“உடல் உறுப்பு தானம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் தொடர்ந்து 5வது முறை­யாக தமி­ழ­கம் முத­லி­டம் வகித்து, மத்­திய அர­சின் விரு­து­க­ளை­யும் பெற்­றுள்­ளது.

“அரசு, தனி­யார் மருத்­து­வ­மனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்­து­கொள்­ளும் ஏழை-எளிய மக்­க­ளுக்கு ரூ.25 லட்­சம் வரை முதல்­வ­ரின் மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்­தின் மூலம் வழங்­கப்­படுகிறது.

“உடல் உறுப்பு தானத்­தின் உன்­ன­தத்தை மக்­கள் அனை­வரும் மன­தில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்ய முன்­வர வேண்­டும்,” என அன்­போடு கேட்­டுக் கொள்கிறேன்.

“உடல் உறுப்­பு­களைத் தானம் செய்­வோம், இறந்த பின்­பும் உயிர் வாழ்­வோம்,” என்று முதல்வர் பழனி­சாமி கூறி­யுள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon