ஆணவக் கொலை வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

திண்டுக்கல்: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் கௌசல்யாவும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கரும் கல்லூரியில் படித்தபோது கலப்பு திருமணம் செய்துகொண்டனர்.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையத்தில் அந்த புதுமணத் தம்பதியை கும்பல் ஒன்று வெறித்தனமாகத் தாக்கியது. அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதால் சங்கர் உயிரிழந்தார். கௌ சல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் தொடர்பாக கௌ சல்யாவின் தாய், தந்தை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது. 
விசாரணை முடிவில் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.  அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆறு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்ன
சாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. 
மற்ற ஐவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டனர். 
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு  மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனு தொடர்பில் வழக்கறிஞர் பிரீதிகா திரிவேதி கூறுகையில், “சென்னை உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சங்கரின் சகோதரர் விக்னேஷ்
வரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon