சுடச் சுடச் செய்திகள்

கடும் அதிருப்தி: திமுகவிலிருந்து ஏராளமானோர் வெளியேறுவர்

சென்னை: தாம் கட்­சி­யை­விட்டு நீக்­கப்­பட்­ட­தற்கு உத­ய­நிதி ஸ்டா­லின்­தான் கார­ணம் என்­றும் ஏரா­ள­மான அதி­ருப்­தி­யா­ளர்­கள் திமு­க­வி­லி­ருந்து வெளி­யேற காத்­தி­ருக்­கி­றார்­கள் என்­றும் கு.க.செல்­வம் தெரி­வித்­துள்­ளார்.

சென்னை ஆயி­ரம் விளக்கு தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான கு.க.செல்­வம் (படம்), டெல்­லி­யில் பாஜக தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­தால் திமு­க­வின் முக்­கி­ய­மான பதவி­ க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார்.

திமுக அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­படும் முன்­னர் அவ­ரி­டம் விளக்­கம் கேட்­கப்­பட்­டது. ஆனால் விளக்­கம் திருப்தி­ க­ர­மா­ன­தாக இல்லை என கூறிய திமுக தலைமை, கு.க.செல்­வத்தை அடிப்­படை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்­டது.

இதற்கிடையே ராமர் கோவில் அடிக்­கல் நாட்டு விழா­வின்­போது கு.க.செல்­வம் பாஜக சென்னை அலு­வ­ல­கம் சென்று வந்­த­தால் அடுத்து அவர் பாஜ­க­வில் இணை­வார் என்று பேசப்­பட்­டது. முன்­ன­தாக கு.க.செல்­வம் அதி­மு­க­வில் இருந்­த­வர் என்­ப­தால் மீண்­டும் அதி­முக செல்ல வாய்ப்­பி­ருப்­ப­தா­க­வும் பேசிக்­கொள்­ளப்­பட்­டது.

ஆனால் இந்­தக் கருத்­து­களை மறுத்­துள்­ளார் கு.க.செல்­வம். தான் எந்­தக் கட்­சி­யி­லும் இணை­யப் போவ­தில்லை என்­றும் கட்சி சாரா எம்­எல்­ஏ­வாக தனது பணியை தொட­ரப்­போ­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று காலை பேசிய அவர், “திமு­க­வில் இருந்து என்னை நீக்­கி­யது ஜன­நா­ய­கப் படு­கொலை. இது­வரை நான் எந்­தக் கட்­சி­யி­லும் இணை­ய­வில்லை. தற்­போது எந்த கட்­சிக்­கும் செல்ல நான் விரும்­ப­வில்லை,” என்­றார்.

“ஆயி­ரம் விளக்கு தொகு­தி­யில் ஸ்டா­லின் தோற்­றார். ஆனால் நான் வெற்­றி­பெற்­றேன். மீண்­டும் நான் போட்­டி­யிட்­டா­லும் வெற்றி பெறும் வாய்ப்­பும் மக்­கள் செல்­வாக்­கும் எனக்கு உள்­ளது. யார் எனக்கு வாய்ப்பு கொடுக்­கி­றார்­களோ அவர்­கள் கட்சி சார்­பில் ஆயி­ரம் விளக்கு தொகு­தி­யில் போட்­டி­யி­டு­வேன்.

“என் மீதான குற்­றச்­சாட்­டு­களில் முகாந்­தி­ரம் இல்லை. திமு­க­வில் இருந்து நீக்­கி­யது மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது. எனது கடி­தத்­திற்கு பதில் கடி­தம்கூட திமுக தர­வில்லை.

“எனது பிரச்­சி­னைக்கு உத­ய­நிதி ஸ்டா­லின் தலை­யீ­டு­தான் கார­ணம். திமு­க­வில் இருந்து நிறைய பேர் வெளியே வரு­வார்­கள். திமு­க­வில் கடும் அதி­ருப்­தி­யிலுள்ள எம்­எல்ஏ, எம்­பிக்­கள் என்­னு­டன் தொடர்­பில் உள்­ள­னர். கட்சியைவிட்டு அவர்­கள் விரை­வில் வெளி­யே­று­வார்­கள்,” என செல்­வம் கூறி­னார்.

கு.க.செல்வம்: நான் நீக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் தலையீடுதான் காரணம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon