விநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்

விநாயகரை வழிபட அனுமதி கேட்கும் முருகன்

1 mins read
de3b4a04-81d3-46b4-99fc-d26df0d133d8
விநா­ய­கர் சிலை­களை நிறுவி வழி­ப­டு­வ­தற்­கான தடையை தமி­ழக அரசு நீக்க வேண்­டும் என்­றும் விநா­ய­கர் சிலை­களை நிறுவி வழி­ப­ட அனு­ம­திக்­கு­மா­றும் தமி­ழக அர­சுக்கு பாஜக மாநில தலை­வர் முரு­கன் கோரிக்கை வைத்­துள்­ளார். -

சென்னை: கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடக்­க­நிலை நடப்­பில் உள்­ள­தால் விநா­ய­கர் சதுர்த்தி அன்று பொது இடங்­களில் விநா­ய­கர் சிலை­களை நிறுவ, ஊர்­வ­லம் செல்ல தடை விதித்து தமி­ழக அரசு அர­சாணை வெளி­யிட்­டது.

கொரோனா காலத்­தில் மக்­கள் பொது இடங்­களில் கூட்­ட­மாக கூடக்­கூ­டாது என்­ப­தால் பொது இடங்­களில் விநா­ய­கர் சதுர்த்­தி­யை­யொட்டி விநா­ய­கர் சிலை வைக்க அனு­மதி இல்லை என­வும் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், விநா­ய­கர் சிலை­களை நிறுவி வழி­ப­டு­வ­தற்­கான தடையை தமி­ழக அரசு நீக்க வேண்­டும் என்­றும் விநா­ய­கர் சிலை­களை நிறுவி வழி­ப­ட அனு­ம­திக்­கு­மா­றும் தமி­ழக அர­சுக்கு பாஜக மாநில தலை­வர் முரு­கன் கோரிக்கை வைத்­துள்­ளார்.

இது தொடர்­பாக நேற்று அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், "தமிழ்­நாட்­டில் விநா­ய­கர் சதுர்த்தி வழி­பாடு கடந்த 40 ஆண்டு கால­மாக இருக்­கிறது. 1983 முதல் விநா­ய­கர் சிலை­களை வைத்து வழி­பட்டு ஊர்­வ­ல­மாக எடுத்­துச் சென்று ஆறு, குளங்­களில் கரைப்­பது வழக்­கம்.

"கொரோனா பர­வல் கார­ண­மாக விநா­ய­கர் ஊர்­வ­லம் நடத்­தப்­ப­டாது அதை நாங்­களே கை

வி­டு­கி­றோம். ஆனால், விநா­ய­கர் சிலை­களை நிறுவி வழி­பட தமி­ழக அரசு அனு­மதி தரவேண்­டும்.

"சிறு கோவில்­களைத் திறந்து மக்­கள் வழி­பட தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது. அதே­போல தனி­ம­னித இடை­வெ­ளி­யோடு விநா­ய­கர் சிலை­களை வழி­பட அனு­மதி தர வேண்­டும்," என்று கோரிக்கை விடுத்­துள்­ளார் முரு­கன்.