நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி யூதிஷா, மூன்று நிமிடம் 25 விநாடிகளில் 230 திருக்குறள்களை கடகடவென்று மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
சொத்தவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்து வரும் 13 வயது மாணவி யூதிஷா, 5 நிமிடத்தில் 230 குறள்களை ஒப்புவிக்க பயிற்சி செய்து வந்தார்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், யூதிஷா இந்த ஐந்து நிமிட நேரத்துக்கு முன்பாகவே குறள்களை ஒப்புவித்தார்.
மூன்று நிமிடம் 25 விநாடிகளில் 230 குறள்களையும் ஒப்புவித்து உலக சாதனை படைத்தார்.
டிரம்ப் உலக சாதனை ஆய்வு மையத்தின் தென்மண்டல நடுவர் சம்பத்குமார் இந்நிகழ்வை பதிவு செய்தார்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்ட பலரும் மாணவியைப் பாராட்டினர்.
இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் 2ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா ஹரிணி 5 நிமிடங்கள் 39 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்து ட்ரம்ப் உலக சாதனை புரிந்திருந்தார். அதன்பின்னர் இச்சாதனையை தற்போது மாணவி யூதிஷா முறியடித்துள்ளார்.
மாணவி யூதிஷா மூன்று நிமிடம் 25 விநாடிகளில் 230 குறள்களை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்தார். அதற்கான சான்றிதழை அவர் காட்டு கிறார்.
படம்:
ஊடகம்

