தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து ரூபாய் மருத்துவர் மறைவு: தமிழகத் தலைவர்கள் இரங்கல்

1 mins read
128f24ae-1720-4a36-8bb9-e720e20e2b1b
ஐந்து ரூபாய் டாக்டர் திருவேங்கடம் -

சென்னை: சென்னை வியாசர்பாடியில் மருத்துவர் திருவேங்கடம் என்பவர் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் அவர், நோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கி வந்தார்.

இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, அவர் நள்ளிரவில் காலமானார்.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது செய்திக்குறிப்பில், "ஐந்து ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் வீரராகவன் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை மருத்துவ சேவை வழங்கியுள்ளார். மருத்துவரை இழந்து வாடும் குடும்பத்தார், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மக்களுக்கு இரங்கல்," என்று குறிப்பிட்டுள்ளார்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.