சென்னையில் கொரோனா: 11,321 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

சென்னையில் கொரோனா: 11,321 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

1 mins read
4f73d8bf-b183-47c6-bd8d-32ffaca74624
சென்னையில் கடந்த வாரம் பெய்த மழையால் இந்தச் சாலையில் நீர் தேங்கியுள்ளது. படம்: ஏஎப்பி -

சென்­னை­யில் அதி­க­பட்­ச­மாக அம்­பத்­தூர் மண்­ட­லத்­தில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்டு 1,410 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வந்­தா­லும் சென்­னை­யில் பாதிப்பு எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

எனி­னும், கோடம்­பாக்­கம், அம்­பத்­தூர் மண்­ட­லங்­களில் மட்­டும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நேற்று இரவு நில­வ­ரப்­படி, சென்­னை­யில் இது­வரை 1,15,444 பேர் நோய்த்தொற்றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இது­வரை 2,434 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். 1,01,689 பேர் குண­ம­டைந்த நிலை­யில், இப்­போது 11,321 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தொடர்ந்து, சென்­னை­யில் மொத்­தம் உள்ள 15 மண்­ட­லங்­களில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரு­வோர், குண­ம­டைந்­த­வர்­கள் மற்­றும் இறந்­த­வர்­கள் விவ­ரத்தை சென்னை மாந­க­ராட்சி வெளி­யிட்­டுள்­ளது. இதில் அதி­க­பட்­ச­மாக அம்­பத்­தூர் மண்­ட­லத்­தில் மட்டும்1,410 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். கோடம்­பாக்­கத்­தில் 1,339 பேரும், அண்ணா நக­ரில் 1,162 பேரும், அடை­யா­றில் 1,118 பேரும் கொரோனா சிகிச்­சை­யில் உள்­ள­னர்.