சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வாஜ்பாய்க்கு சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயாவில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு கூடிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எல்.முருகன், தமிழகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியே (பாஜக தலைமையினான அதிமுக கூட்டணி) எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். தமிழக அரசியலில் ஆறு மாதங்களில் மாபெரும் மாற்றம் ஏற்படப்போகிறது என்று கூறியுள்ளார்.

