ஒரு முக்கிய பணியின் காரணமாகவும் இனி தடையின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்கும் வகையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 'இ-பாஸ் ' வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதை யடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் தவித்து வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர்.
இதனால், சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையின் எல்லைப் பகுதியான வண்டலூரில் வழக்கம்போல் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட து. வாகனங்கள் ஊர்ந்து சென்றன .
பொங்கல், தீபாவளி பண்டிகையை முடித்த பின்னர் சென்னை திரும்பும் மக்களைப் போல், வாகன நெரிசல் அதிகம் இருந்தது. குறிப்பாக, பரனூர் சுங்கச்சாவடியில் வாகனம் அதிகளவில் காணப்பட்டது. தமிழக முதல்வ ர் பழனிசாமியின் உத்தரவின் பேரில் இ-பாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

