‘பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் கார் பரிசு’

சென்னை: ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்­சி­யைப் பின்­பற்­றியே பாஜ­க­வும் தலை­வர்­க­ளுக்கு பரிசு அளிக்­கும் திட்­டத்­தைக் கொண்டு வந்­துள்ளதாக­ பாஜக தமி­ழக தலை­வர் எல்.முரு­கன் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரு­வதை அடுத்து, இத்­தேர்­த­லில் பாஜக வேட்­பா­ளரை வெற்­றி­பெற வைக்­கும் மாவட்­டத் தலை­வர்­க­ளுக்கு இன்­னோவா கார் பரிசு அளிக்­கப்­படும் என எல்.முரு­கன் அறி­வித்­துள்­ளார்.

பாஜக மாநில நிர்­வா­கி­களிடம் காணொளிக் காட்சி மூலம் பேசிய எல்.முரு­கன், “வரும் சட்­ட­மன்றத் தேர்­த­லில் தமி­ழ­கத்­தில் தடம் பதித்தே ஆகவேண்­டும். இதற்­காக கட்­சி­யி­னர் கடி­ன­மாக உழைக்­க­வேண்­டும். பாஜக வேட்­பா­ளரை வெற்­றி­பெ­றச் செய்­யும் மாவட்­டத் தலை­வர்­க­ளுக்கு இன்­னோவா கார் பரி­சாக வழங்­கப்­படும்,” என்றார். இது பாஜ­க­வி­ன­ரி­டையே மிகுந்த உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்நிலையில், “தமி­ழ­கத்­தில் அதி­மு­க­வு­டன் கூட்­டணி தொட­ரும். பாஜக கைகாட்­டும் கட்­சியால்­மட்டுமே ஆட்­சிக்கு வர­மு­டி­யும்,” என்றார்.

இதற்­கி­டையே, நாகர்­கோ­வி­லில் பேட்­டி­ய­ளித்த முன்­னாள் மத்­திய அமைச்­சர் பொன். ராதா­கி­ருஷ்­ணன், “பாஜ­கவை பொறுத்­த­வரை, வரு­கிற சட்­ட­மன்றத் தேர்­த­லில் அதிக இடங்­களில் வெற்றிபெறும். பாஜக அங்­கம் வகிக்­கும் ஆட்­சி­தான் தமி­ழ­கத்­தில் உரு­வா­கும்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!