தலைகீழாக நின்று 111 அம்புகளை தெறிக்கவிட்டுள்ள சென்னை சிறுமி

தலைகீழாக நின்று 111 அம்புகளை தெறிக்கவிட்டுள்ள சென்னை சிறுமி

1 mins read
6dd704c4-0fcc-4b5e-8d0b-af930db02ad2
சமூக வலைதளங்களில் குழந்தை அறிவாளி, போர் வீரர் என்று பலராலும் புகழப்படும் சஞ்சனா.படம்: ஊடகம் -

சென்னை: சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற 5 வயது சிறுமி தலைகீழாகத் தொங்கியபடி 13.5 நிமிடங்களில் 111 அம்புகளைத் பறக்கவிட்டுள்ளார். இவரது திறனைப் பார்த்து மிரண்டு போயுள்ள பலரும், பாராட்டு களை குவித்து வருகின்றனர். இந்த உலக சாதனையை இவர் சுதந்திர தினத்தன்று சென்னையில் நிகழ்த்தினார்.

சஞ்சனாவுக்கு பயிற்சி அளித்த ஷிஹன் ஹூசைனி கூறுகை யில், "தலைகீழாகத் தொங்கிக்கொண்டு 111 அம்பு களை எய்தியது உலக சாதனை. இதுவரை யாருமே இதுபோல் சாதனையை நிகழ்த்தவில்லை. கின்னஸ் உலக சாதனைக்கும் இவரது சாதனையை அனுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இந்திய அம்பு எய்துவோர் கழகத்தின் தலை வர் பிரமோத் சந்துர்கர், "சஞ்சனா உலக சாதனை படைத்துள்ளார்,'' என்று தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறு வனத்துக்கு சஞ்சனாவின் தந்தை அளித்துள்ள பேட்டி யில், "சஞ்சனாவுக்கு 10 வயதாகும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாதனையை நிகழ்த்த பயிற்சி தரப்படும். அதன்பின்னர் 2032ஆம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டுக்கு பல பதக்கங்களை சஞ்சனா வென்று வருவார்,'' என்றார்.