சசிகலா விடுதலை: காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு

சசிகலா விடுதலை: காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு

1 mins read
0782b163-dd73-4f27-9387-f41aa3a8a8c0
-

பெங்களூரு: சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக சிறைத்துறையின் முன்னாள் தலைவர் ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முத்து மாணிக்கம்.

"சிறப்புச் சலுகைகளைப் பெற பணம் கைமாறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தது. அந்தக் குழு இன்னும் முழுமையான விசாரணை அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை.

"இத்தகைய சூழலில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது," என முத்து மாணிக்கம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெற உள்ளது.

இம்முறை பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே சசிகலா தரப்பு காங்கிரசு டன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருது கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரே சசிகலா விடுதலையை எதிர்த்துள்ளார்.