தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிர்போகும் நிலையிலும் 'பிள்ளை'க்கு பால் கொடுத்த பசு

1 mins read
938db199-daee-4cba-9094-e2db75d26514
உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்த அந்த நிலையிலும் தன்னுடைய கன்றுக்கு பால் கொடுத்தது அந்தப் பசு. படம்: இணையம் -

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள செங்கல்படுகை பகுதியைச் சேர்ந்த விவசாயி முகமது ஜாபர் அலி என்பவரின் பசு மாடு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டது.

நண்பர்கள் உதவியுடன் தேடியபோது கல்லாறு பகுதியில் பலத்த காயங்களுடன் பசு கண்டுபிடிக்கப்பட்டது.

காட்டுப்பன்றிக்கு வைக்கப்படும் 'அவுட்டுக்காய்' என்னும் நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு படுகாயமடைந்தது தெரியவந்தது.

வெடி வெடித்ததில் பசுவின் வாய்ப்பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது பார்ப்போர் இதயத்தை உருகச் செய்தது.

உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்த அந்த நிலையிலும் தன்னுடைய கன்றுக்கு பால் கொடுத்தது அந்தப் பசு.

இந்த மனமுருகும் செயலைக் காட்டும் புகைப்படங்களும் காணொளிப் படங்களும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

இந்நிலையில், காயமடைந்த பசு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. பசுவின் மரணம் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.