'ஸ்டெர்லைட்' ஆலை மூடல் தீர்ப்பை கொண்டாடிய மக்கள்

'ஸ்டெர்லைட்' ஆலை மூடல் தீர்ப்பை கொண்டாடிய மக்கள்

1 mins read
457e3145-4476-4510-99da-2bf57ed6b895
கோப்ப்படம்: இணையம் -

சென்னை: ஸ்டெர்­லைட் ஆலை­யைத் திறக்க அனு­ம­திக்க முடி­யாது என சென்னை உயர் நீதி­மன்­றம் அளித்த தீர்ப்பை பொது­மக்­கள் பட்­டா­சு­கள் வெடித்­தும் இனிப்­பு­கள் வழங்­கி­யும் கொண்­டா­டி­னர். தமிழ்­நாட்­டில் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக சுமார் முப்­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக தொடர் போராட்­டங்­கள் நடை­பெ­று­கின்­றன. இதன் உச்­ச­மாக 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போலி­சார் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் 13 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­தப் படு­கொலை சம்­ப­வத்­தைத் தொடர்ந்து ஸ்டெர்­லைட் ஆலையை மூட தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டது. ஸ்டெர்­லைட் ஆலையை நடத்­தும் வேதாந்தா குழு­மம் தமி­ழக அர­சின் அர­சா­ணைக்கு எதி­ராக வழக்­குப் போட்­டது.

சென்னை உயர் நீதி­மன்­றம் நேற்று வேதாந்தா குழு­மத்­தின் மனுவை தள்­ளு­படி செய்து, "ஸ்டெர்­லைட் ஆலையை திறக்க அனு­மதி இல்லை; ஸ்டெர்­லைட் ஆலையை மூடும் தமி­ழக அர­சின் அர­சாணை செல்­லும்," என தீர்ப்­ப­ளித்­தது.

இந்தத் தீர்ப்பு வெளி­யானதும் பொது­மக்­கள் பல இடங்­களில் பட்­டா­சு­கள் வெடித்­தும் இனிப்­பு­கள் வழங்­கி­யும் கொண்­டா­டி­னர். குறிப்­பாக, தூத்­துக்­குடி வட்­டா­ரத்­தில் பெரு­ம­கிழ்ச்சி காணப்­பட்­டது. சமூ­க­நல ஆர்­வ­லர்­கள் பல­ரும் இந்­தத் தீர்ப்பை வர­வேற்­றுள்­ள­னர்.