கைபேசி இலவசமாக தந்து மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்

விரு­து­ந­கர்: பள்­ளி­களில் மாண­வர்­கள் சேர்க்­கைக்கு தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

எல்­லாப் பள்­ளிக்­கூ­டங்­க­ளைப்­போல விரு­து­ந­கர் மாவட்­டம் ஸ்ரீவில்­லி­புத்­தூர் அருகே உள்ள படிக்­கா­சு­வைத்­தான்­பட்டி ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப் பள்­ளி­யி­லும் மாண­வர் சேர்க்கை தொடங்­கி­யது. பேருந்து வச­தி­யில்­லாத இக்­கி­ரா­மத்­தில் தலைமை ஆசி­ரி­ய­ரும் ஓர் ஆசி­ரி­யை­யும் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர். கொரோனா பர­வல் அச்­சத்­தால் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ள­நி­லை­யில் மாண­வர்­க­ளுக்கு பாடங்­களை தமி­ழக அரசு இணை­யத்­த­ளம் மற்­றும் தொலைக்­காட்சி மூலம் நடத்தி வரு­கிறது.

இந்­தக் கிரா­மத்­தில் அனை­வ­ரும் கூலி வேலை செய்­ப­வர்­கள் என்­ப­தால் இணை­யம் மூலம் பாடம் கற்க அவர்­க­ளி­டம் திறன்­பேசி இல்லை. கைபேசி என்­பது கன­வா­கவே இருந்து வந்த சூழ்­நி­லை­யில், தலைமை ஆசி­ரி­யர் ஜெயக்­கு­மார் ஞான­ராஜ் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் கைபேசி வாங்­கித் தர முடிவு செய்­தார். இதன்­படி மாண­வர் சேர்க்கை தொடங்­கிய முதல் நாளில் பள்­ளி­யில் சேர்ந்த 4 மாண­வர்­க­ளுக்கு கைபேசி வழங்­கப்­பட்­டது. தலைமை ஆசி­ரி­யர் கூறு­கை­யில், “இப்­பள்­ளி­யில் எந்த வகுப்­பிற்கு புதி­தாக மாண­வர்­கள் வந்­தா­லும் அவர்­க­ளுக்கு கைபேசி இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 2 கி.மீ. தூரத்­தில் உள்ள அண்­ணா­ந­க­ரில் இருந்து படிக்க வரும் மாண­வர்­க­ளுக்கு எனது சொந்த செல­வில் ஆட்டோ ஏற்­பாடு செய்­துள்­ளேன்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!