சென்னையில் தொற்று அதிகரிப்பு

சென்னையில் தொற்று அதிகரிப்பு

1 mins read
9729fddf-ed9b-4840-8bc6-8fda329a6fea
ஹைதரா பாத்தில் குழந்தையிடம் இருந்து கொவிட்-19 சோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கப் படுகிறது. படம்: ஏஎஃப்பி -

சென்னை: சென்னையில் கிருமித் தொற்று மீண்டும் அதிகரித்து உள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 12,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை நேற்று 12,103ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்புக்கு உள்ளா வோரின் எண்ணிக்கை ஆயிரத் துக்கு மேல் பதிவாகி வருகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 11,000க்கு குறைந் திருந்த நிலையில் தற்போது 12,100ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,446 பேரும் கோடம்பாக்கத்தில் 1,410 பேரும் அண்ணா நகரில் 1,373 பேரும் அடையாறில் 1,247 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவால் ஆண்கள் 60 விழுக்காட்டினர், பெண்கள் 40 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவ டிக்கைகளை மாநகராட்சி நிர் வாகம் தீவிரமாக்கியுள்ளது. சென்னையில் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வரும் நிலையில், குண மடைந்தோர் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

மொத்தமாக உள்ள 15 மண்டலங் களில் 10 மண்டலங்களில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்து உள்ளது.

நோய்த் தொற்றுக்கு உள்ளான வர்களில் 20-29 வயதுக்குள் 18 விழுக்காட்டினர், 30-39 வயதுக்குள் 19 விழுக்காட்டினர், 40-49 வயதுக்குள் 18 விழுக்காட்டி னர், 50-59 வயதுக்குள் 16 விழுக் காட்டினர், 9 வயதுக்குள் 3.35 விழுக்காட்டினர், 80 வயதுக்கு மேல் 1.86 விழுக்காட்டினர் பாதிக்கப் பட்டுள்ளனர்.