முதல் நாளில் ரூ. 33 கோடிக்கு மது விற்பனை

சென்னை: சென்னை ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகளின் வசூல் சாதனை புரிந்துள்ளன. சென்னையில் கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த கடைகள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டன.

முதல் நாளிலேயே 33 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, சென்னையில் ஒரு நாளில் 12 கோடி வசூல் ஆவது வழக்கம்.

சென்னையில் மார்ச் மாதத்திற்கு பின் இம்மாதம் 18ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 720 கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் 5 மாதங்களுக்குப் பின் சென்னையில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டதால் பெரிய அளவில் கூட்டம் வரும் என்று நீண்ட வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பல இடங்களில் மதியத்திற்கு மேல் கூட்டம் அதிகரித்தது. மாலையில் கூட்டம் மேலும் கூடியது.

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, சேப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

ஆனால் கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை. இருந்தாலும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. சென்னையில் வழக்கமாக ரூ.12 கோடிக்கு தினமும் மதுவிற்பனையாகும். வார இறுதியில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனையாகும். ஆனால் ஐந்து மாதங்களுக்குப் பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுவிற்பனை ஒரே நாளில் 33 கோடி ரூபாயை தொட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வார இறுதி நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!