சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் அந்த ஆலைக்கு தமிழக அரசு 'சீல்' வைத்தது செல்லும் என்றும் தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்றம், வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை நேற்று தள்ளுபடி செய்தது.
அதையடுத்து எதிர் தரப்பான, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதி காரம் அமைப்பு சார்பில் ேநற்று உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தங்கள் முடிவை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனுத் தாக்கல் செய்யப் பட்டது.
அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால் எங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

