தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

60 நாட்களில் 400,000 வீடுகளைக் கட்டுங்கள்

1 mins read
ab90d4d1-93a6-4a81-9b4a-a0f9f0868980
துணை முதல்­வர் ஓ. பன்­னீர்­செல்­வம். கோப்புப்படம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் ஏழை­களுக்­கான தனி வீடு­கள் கட்­டு­மானத் திட்­டத்­தின்­கீழ் 400,000 வீடு­களை 60 நாட்­களில் கட்டி முடித்து ஒப்­ப­டைக்­கும்­படி குடிசை மாற்று வாரி­யத்­துக்குத் துணை முதல்­வர் ஓ. பன்­னீர்­செல்­வம் உத்தரவிட்டார்.

பிர­த­மர் வீட்டு திட்­டத்­தின்­கீழ் கட்­டப்­படும் அந்த ஒவ்­வொரு வீட்டுக்­கும் மொத்­தம் ரூ. 210,000 மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

கட்­டு­மா­னப் பணி­கள் நடக்கை யில், நான்கு கட்­டங்­க­ளாக அந்­தப் பணம் கொடுக்­கப்­படும். அந்த மானி­யத்­தில் ரூ. 1.5 லட்­சத்தை மத்­திய அர­சாங்­க­மும் ரூ. 60,000 தொகையை மாநில அர­சாங்­க­மும் கொடுக்­கின்­றன.

துணை முதல்­வர் பன்­னீர் செல்­வம் குடிசை மாற்று அதி­கா­ரி­களைச் சந்­தித்து அவர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­னார். கூடு­மான வரை விரை­வாக அந்த வீடு­க­ளைக் கட்டி முடித்து ஏழை­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கும்­படி அவர் அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்.

இதனிடையே குடிசை மாற்று வாரிய வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு உரிய பட்டா பத்­தி­ரங்­களைக் கொடுக்­கும்­படி­யும் அதி­கா­ரி­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

உலக வங்கி உத­வி­யு­டன் கூடிய சென்னை நகர மேம்­பாட்டுத் திட்­டம் மற்­றும் தமிழ்­நாடு நகர மேம்­பாட்­டுத் திட்­டம் ஆகி­ய­வற்­றின் கீழ் ஏழை­க­ளுக்­கான வீட்­டுக் கட்­டு­மானத் திட்­டம், மாநி­லத்­தில் குடி­சை­களில் வாழும் மக்­க­ளுக்­கா­கத் தொடங்­கப்­பட்­டது.

மாநி­லம் முழு­வ­தும் உள்ள 732 குடிசை பகு­தி­க­ளைச் சேர்ந்த குடும்­பங்­கள் இந்­தத் திட்­டத்­தின் மூலம் வீடு­க­ளைப் பெற்று இருக்­கின்­ற­னர் என்­றா­லும் 40 ஆண்­டு­கா­ல­மாக அதற்­கான பட்டாவை அந்­தக் குடும்­பங்­கள் பெற­வில்லை. காத்திருக்கும் 42,000க்கும் மேற்பட்ட குடும்­பங்­களிடம் பட்­டாவை ஒப்­ப­டைக்­கும்­படி அதி­கா­ரி­களை துணை முதல்­வர் கேட்­டுக்­கொண்­டார்.