ரகுமான்கான் காலமானார்

ரகுமான்கான் காலமானார்

1 mins read
eefbb2bb-1748-4a06-a8b8-e5859cef15ea
-

சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ரகுமான் கான் (படம்) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

"திமுகவின் 'இடி', 'மின்னல்', 'மழை'யில் ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த திமுகவின் சிங்கச் சிப்பாய்களில் அவர் ஒருவர் என்று அந்தக் கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.