ஆதரவாளர்கள் உற்சாக தகவல்: 'கலைஞர் திமுக' உதயமாகிறது

ஆதரவாளர்கள் உற்சாக தகவல்: 'கலைஞர் திமுக' உதயமாகிறது

1 mins read
704c4f0c-8844-4711-863c-5f3c15f65e7a
'கலை­ஞர் திமுக' என்ற புதிய அர­சி­யல் கட்­சியை முக அழ­கிரி அறி­விக்­கப்போகி­றார் என்று தொண்­டர்­கள் ஊக்­கத்­து­டன் பிர­க­ட­னப்­ப­டுத்தி வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.. கோப்புப்படம் -

சென்னை: தமிழ்­நாட்­டின் முக்­கிய அர­சி­யல் கட்­சி­யான திமு­க­வின் இமா­ல­யத் தலை­வ­ராக இருந்த கரு­ணா­நி­தி­யின் புதல்­வ­ரும் முன்னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான முக அழ­கிரி, அர­சி­ய­லில் புதிய வியூ­கத்தை அரங்­கேற்­றப் போகிறார் என்று அவ­ரு­டைய ஆத­ர­வாளர்­கள் உற்­சா­க­மாக தெரி­விக்­கி­றார்­கள்.

'கலை­ஞர் திமுக' என்ற புதிய அர­சி­யல் கட்­சியை முக அழ­கிரி அறி­விக்­கப்போகி­றார் என்று தொண்­டர்­கள் ஊக்­கத்­து­டன் பிர­க­ட­னப்­ப­டுத்தி வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தமிழ்­நாட்­டில் சட்­ட­மன்­றத் தேர்தல் நெருங்­கும் வேளை­யில், திமுக, அதி­முக ஆகிய இரண்டு பெரும் கட்­சி­களும் தங்­க­ள் நிர்வாக முறை­க­ளை­ முழு­மை­யாக மாற்றி அமைத்து வரு­கின்­றன. தொண்­டர்­களை, பிர­ப­ல­ங்­களைக் கட்­சி­யில் சேர்க்­கும் வியூ­கங்­க­ளை­யும் அவை வகுத்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், இது­வ­ரை­யில் தனித்தே இருந்து வரும் முக அழ­கி­ரி­யும் கள­மி­றங்­கப் போகி­றார் என்று இப்­போது பேச்சு அடி­ப­டு­கிறது. கரு­ணா­நிதி மறைந்­த­தும் திமு­க­வில் தன்னை இணைத்­துக் கொள்ள எவ்­வ­ளவோ முயன்­றும் அதில் அழ­கிரி வெற்­றி­பெ­ற­வில்லை.

அதே­வே­ளை­யில், திமு­க­வைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வரை வளைத்து இருக்­கும் பாஜக, அந்­தக் கட்­சியை மேலும் பல­வீனப்­படுத்த பல வழி­க­ளி­லும் யோசித்து வரு­கிறது.

இந்­தச் சூழ்­நி­லை­யில் அழ­கிரி ஆத­ர­வா­ளர்­கள் 'அண்­ணன் நம்மை அழைக்­கப்­போ­கி­றார்' என்று குரல் கொடுத்து வரு­கி­றார்­கள்.

"கலை­ஞர் திமுக என்ற பெய­ரில் கட்­சியை அழ­கிரி தொடங்­கத்­தான் போகி­றார். திமுக தலைமை மீது ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் ஒவ்­வொரு கார­ணங்­க­ளுக்­காக சல­ச­லப்பு இருக்­கிறது," என்று அழ­கிரி ஆத­ர­வா­ளர் தெரி­வித்­த­தாக ஊட­கத் தக­வல் கூறியது.