அரசியலில் எதிரொலித்த விநாயகர் சதுர்த்தி: அதிமுக-பாஜக உறவில் கசப்பு

சென்னை: தமிழ்­நாட்­டில் ஆளும் அதி­மு­க­விற்­கும் மத்­தி­யில் ஆட்சி புரி­கின்ற பாஜ­க­வுக்­கும் இடை­யில் விரி­சல் கூடி வரு­வ­தாக கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கி­றார்­கள்.

ஜெய­ல­லி­தா­வின் மறை­வுக்­குப் பிறகு அவ­ரு­டைய தோழி­யான சசி­க­லா­வின் செல்­வாக்கு குறைந்து, எடப்­பாடி பழ­னி­சாமி முதல்­வ­ராக பொறுப்­பேற்று இது நாள் வரை அதி­முக ஆட்சி நடந்து வரு­வ­தற்கு மத்­திய அர­சு­டன் அதி­முக அனு­ச­ரித்து நடந்து வரு­வதே முக்­கி­ய­மான கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

நடப்­பது அதி­முக ஆட்சி என்­றா­லும் அதன் ஒவ்­வொரு அசை­வை­யும் நரேந்­திர மோடி­யும் அமித் ஷாவும் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றார்­கள் என்­றும் கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

அதி­மு­க­வில் இப்­போது துணை முதல்­வ­ராக இருக்­கும் பன்­னீர்செல்­வத்­துக்­கும் முதல்­வ­ராக இருக்­கும் பழ­னி­சா­மிக்­கும் இடை­யில் பிரச்­சினை ஏற்­பட்­டு பிறகு இருவரும் சம­ர­சமா­யி­னர்.

துணை முதல்­வர் பத­வியை பன்­னீர் செல்­வம் ஏற்­றுக்­கொண்­டார். அதே­வே­ளை­யில், கட்­சி­யில் பழ­னி­சா­மி­யை­விட பன்­னீர் செல்­வத்­துக்கு முக்­கிய பதவி கொடுக்­கப்­பட்­டது. இத்­த­கைய ஓர் இணக்­கம் ஏற்­ப­ட­வும் பாஜக உறு­து­ணை­யாக இருந்­தது என்று தெரி­கிறது.

ஆனா­ல் சட்­ட­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரு­வதை அடுத்து பாஜக இல்­லா­மல் தேர்­த­லைச் சந்­திக்­கவே அதி­முக விரும்­பு­வ­தாக கவ­னிப்­பா­ளர்­கள் நம்­பு­கி­றார்­கள்.

இதை அப்­போ­தைக்கு அப்­போது வெளிப்­படையாக இல்லை என்­றா­லும் மறை­மு­க­மாக அதி­முக தலை­வர்­களில் சிலர் வெளிப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.

இந்தி மொழி போன்ற விவ­கா­ரங்­களில் இது தெரி­ய­வந்­தது. விநா­ய­கர் சதுர்த்தி விழா­வைக் கொண்­டா­டு­வ­தன் தொடர்­பிலான பிரச்­சி­னை­யும் இதில் இப்­போது சேர்ந்துகொண்டுள்ளது.

கொவிட்-19 தொற்று இருப்­ப­தால் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்­டாடும் பொது நிகழ்ச்­சி­க­ளுக்கு தமி­ழக அரசு தடை­வி­தித்­து­விட்­டது. இதை பாஜக மாநிலத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான எச். ராஜா கடு­மை­யாக விமர்­சித்­தார். கடந்த 30 ஆண்டு கால­மாக ஒரு பெண்­ம­ணிக்கு அடங்கி இருந்த கோழை­களே இப்­போது மாநி­லத்­தின் பொறுப்­பில் இருக்­கி­றார்­கள் என்று ராஜா வர்­ணித்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்த அதி­முக மீன்­வளத் துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார், அதே பெண்­ம­ணி­யி­டம்­தான் பாஜ­க­வி­னர் இது நாள்­வரை கைகட்டி நின்­ற­னர் என்­றார். “அதி­முக அர­சும் கோழை அல்ல. அதன் தலை­வர்­களும் கோழை அல்ல. யாரும் உர­சிப் பார்க்க வேண்­டாம்,” என்று மறை­மு­க­மாக பாஜக தலை­வ­ருக்கு அமைச்­சர் பதி­லடி கொடுத்­தார்.

ராஜா­வும் தமி­ழக பாஜக தலை­வர் முரு­கனும், விநா­ய­கர் சதுர்த்­தியைப் பகி­ரங்­க­மா­கக் கொண்­டாட தமி­ழக அரசு அனு­மதிக்­கா­தது பற்றி கடு­மை­யா­கக் குறை­கூ­றி­ வருகிறார்கள்.

எல்­லா­வற்­றை­யும் கருத்­தில்­கொண்டு பார்க்­கை­யில் சரி­யான வாய்ப்­புக்­காக அதிமுக தலை­மைத்­து­வம் காத்து இருக்­கிறது என்­றும் அத்­த­கைய ஒரு வாய்ப்பு கிடைத்­த­தும் பாஜ­கவை அது கைவிட்­டு­வி­டும் என்­றும் ஆருடங்­கள் கூறுகின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!