கொவிட்-19 சென்னையில் மீண்டும் ஏறுமுகம்; 3% கூடியது

2 mins read
1a24b9c0-77ab-4554-9d2b-2ad7f205bda3
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டத்தின் மூன்றாவது நாளில் பிள்ளையார் சிலையைக் கடலில் கரைக்கச் செல்கிறார்கள் இவர்கள். படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

சென்னை: சென்­னை­யில் கொவிட்-19 தொற்று மீண்­டும் அதி­க­ரித்து வருவதாக அதி­காரிகள் எச்சரிக்கை விடுத்து இருக்­கிறார்­கள்.

இ-பாஸ் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு தலை­ந­க­ருக்­குள் அதி­க­மக்கள் அனு­ம­திக்­கப்­பட்­டதை அடுத்து தொற்று விகி­தம் 7 விழுக்­காட்­டி­லி­ருந்து 10.7 விழுக்­கா­டா­கக் கூடி­விட்­டது என்று அவர்­கள் தெரி­வித்துள்ளனர்.

இந்­நி­லை­யில், கொரோனா பரி­சோ­த­னையை அதி­க­ரிக்க வேண்­டும் என்று இந்­திய மருத்துவ ஆய்வு மன்­ற­மும் உலக சுகா­தார நிறு­வ­ன­மும் வலி­யு­றுத்தி இருக்­கின்­றன. கிரு­மித்­தொற்று விகி­தம் 10%ஐ தாண்­டி­விட்­டால் பரி­சோ­த­னை­களை அதி­கப்­ப­டுத்த வேண்­டும் என்று இந்த அமைப்பு­கள் தெரி­விக்­கின்­றன.

பல இடங்­களில் இருந்­தும் பல மாவட்­டங்­களில் இருந்­தும் சென்­னைக்கு வரு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து இருக்­கிறது. அவர்­க­ளைப் பரி­சோ­திக்­கும் நடை­மு­றை­களும் கூட்­டப்­பட்­டுள்­ளன.

தலை­ந­க­ரில் நாள்­தோ­றும் புதிதாக கிருமி தொற்­று­வோ­ரின் எண்­ணிக்கை 1,100 முதல் 1,200 வரை இருந்து வரு­கிறது. ஆனால் கடந்த ஒரு வார காலத்­தில் பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்து இருப்­ப­தாக மாந­க­ராட்சி நிர்­வா­கம் கூறு­கிறது. சென்­னை­யில் 12 மண்­ட­லங்­களில் தொற்று கூடி இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

மாநி­லம் முழு­வ­தும் பார்க்­கை­யில், நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி, கொவிட்-19 தொற்று கார­ண­மாக மொத்­தம் 379,385 பேர் பாதிக்­கப்­பட்டு இருந்­தார்­கள். அவர்­களில் 319,327 பேர் குண­மடைந்­து­விட்­ட­னர். 53,541 பேர் சிகிச்­சை பெற்று வரு­கி­றார்­கள். 6,517 பேர் பலியாகிவிட்டனர்.

இவ்­வே­ளை­யில், சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் ஓர் அறி­விப்பை விடுத்­துள்­ளார். கொவிட்-19 பரி­சோ­தனை முடி­வு­களை பொது­மக்­கள் குறுஞ்­செய்தி மூலம் தெரிந்­து­கொள்­வ­தற்­கான வசதி விரை­வில் நடை­மு­றைப்­படுத்­தப்­படும் என்றார் அவர்.

கோயம்­புத்­தூ­ரில் ஆய்­வுக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அமைச்­சர், அர­சாங்­கத்­தின் இத்­த­கைய திட்­டம் இன்­னும் இரண்டு வார காலத்­திற்­குள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.