அமைச்சரே விதிகளை மீறியதாக புகார்

அமைச்சரே விதிகளை மீறியதாக புகார்

1 mins read
f7758ca5-9ba6-4f49-be31-bc22cc79161f
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி -

ஈரோடு: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பவானி யில் உள்ள கூடுதுறை சங்க மேஸ்வரர் கோவிலுக்குச் சென்று கூடுதுறையில் புனித நீராடி, போலிஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தார்.

இதைக் கண்ட பலரும், "கொரோனா முழு ஊரடங்கு, மக்களுக்குத்தான்; அமைச்சர்களுக்கு இல்லையா? அமைச்சரின் இந்த செயல், கொரோனா தடுப்பு நட வடிக்கையைக் கேலிக்குரியதாக்கிவிட்டது," என்றனர்.

இதனிடையே, அமைச்சர் பாலாஜி நேற்றும் ஒரு சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ தவசலிங்க சுவாமி கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டதும் புகார்களுக்கு இடமாகி உள்ளது.