சாத்தான்குளம்: போலிசார் பிணை மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம்: போலிசார் பிணை மனுக்கள் தள்ளுபடி

1 mins read
b38e8947-e8d0-495e-ae48-0a065487921f
சாத்தான்குளம் காவல் நிலையம். கோப்புப்படம் -

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் போலிஸ் காவலர்கள் மூவரது பிணை மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டன.

வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட பத்துப் பேர் கைதாகினர். ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்ற ஒன்பது பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தலைமைக் காவலர் முருகன் உள்ளிட்ட மூவர் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரிக்கும் சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.