மதுரை: விளையாட்டுப் பயிற்சியாளர் மீது தாக்குதல் நடத்தி நகை மற்றும் ரொக்கப் பணத்தைப் பறித்தது தொடர்பாக பெண் வழக்கறிஞர், அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் கைதாகினர்.
மதுரையைச் சேர்ந்த 25 வயதான பாரதிராஜா இறகுப் பந்து விளையாட்டுப் பயிற்சியாளராவார்.
நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரை திடீரென ஐந்து பேர் வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து பெண் வழக்கறிஞரான ஈஸ்வரி (வயது 29) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

