11 எம்எல்ஏக்களிடம் இன்று சபாநாயகர் விசாரணை

11 எம்எல்ஏக்களிடம் இன்று சபாநாயகர் விசாரணை

1 mins read
5711ab01-291f-48b0-b75e-d324758da78f
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.  படம்: ஊடகம் -

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தனபால் இன்று விசாரணை நடத்த உள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, அவர் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

அதிமுகவில் இருந்து கொண்டே எதிர்த்து வாக்களித்ததால் 11 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி திமுக உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

இது குறித்து சட்டத்தின் அடிப்படையில் சபாநாயகரே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் சபாநாயகர் இது தொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து 11 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் தனபால் இன்று விளக்கம் கேட்க உள்ளார்.