தங்கத்தை உருக்கி உள்ளாடையில் மறைத்து கடத்திய தம்பதி கைது

தங்கத்தை உருக்கி உள்ளாடையில் மறைத்து கடத்திய தம்பதி கைது

2 mins read
536527ad-3028-498b-ab8a-bcf1fc0782d6
வித்தியாசமாக தயாரிக்கப் பட்ட தங்க தாட்கள். படம்: தமிழக ஊடகம் -

கோவை: துபா­யில் இருந்து வந்தே பாரத் திட்­டத்­தின்கீழ் கோவை வந்த பய­ணி­க­ளி­டம் ரூ.1.15 கோடி தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. தங்­கத்தைக் கடத்திய தம்­ப­தி­யி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இம்­மா­தம் 10ஆம் தேதி துபா­யில் இருந்து ஏர் இந்­தியா விமா­னம் மூலம் கோவை விமான நிலை­யம் வந்த பய­ணி­கள் சோதனை செய்­யப்­பட்­ட­னர்.

அப்­போது, கோவை விமான நிலை­யத்­தில் சோத­னை­யில் ஈடு­பட்ட கோவை மத்­திய வரு­வாய் புல­னாய்­வின் துணை இயக்­கு­நர் சதீஷ் தலை­மை­யி­லான அதி­கா­ரி­கள் பய­ணி­களில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான கணவன், மனைவியிடம் விசா­ரணை நடத்­தி­னர்.

திருப்­பூர் மாவட்­டம் பல்­ல­டத்­தைச் சேர்ந்த 46 மற்­றும் 33 வய­து­டைய தம்­ப­தி­யி­னர் தங்­க­ளது உள்­ளா­டை­களில் மறைத்து எடுத்து வரப்­பட்ட ஆறு பாக்­கெட்­டு­களில் இருந்த 2,610 கிராம் எடை­யுள்ள ரூ.1 கோடியே 15 லட்­சத்து 15 ஆயி­ரத்து 812 மதிப்­புள்ள தங்­கத்தை பறி­மு­தல் செய்­த­னர்.

விமான நிலை­யத்­தில் சுங்­கத் துறை­யி­னரின் 'மெட்­டல் டிடக்­டர்', 'எக்ஸ்ரே' ஆகி­ய சோதனைகள் மூலம் கண்­ட­றி­யப்­ப­டாத வகை­யில் தங்­கத்தை உருக்கி தாளில் ஒட்டி அதனை உள்­ளா­டை­களில் தைத்து எடுத்து வரப்­பட்­டது அதி­கா­ரி­க­ளின் சோத­னை­யில் தெரி­ய­வந்­தது.

இவ்­வாறு நூதன முறை­யில் கோவை விமான நிலை­யத்­திற்­குத் தங்­கம் கடத்­தப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல் முறை என மத்­திய வரு­வாய் புல­னாய்வு அதி­கா­ரி­கள், கூறி­னர்.

தங்­கத்­தைப் பிரித்து எடுக்க பல்­வேறு கட்ட நடை­மு­றை­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அவர்­கள் கூறி­னர். தங்­கத்தைக் கடத்திய தம்­ப­தி­யி­னர் கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு விதி­முறைகளின் அடிப்­ப­டை­யில் தனி­மைப்படுத்­தப்­பட்டு 14 நாட்­கள் முடிந்­த­தும் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற காவ­லில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.