திருச்சியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்ளாதேஷ் பெண்

திருச்சியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்ளாதேஷ் பெண்

1 mins read
6415f351-a048-481a-87f4-155c107284c9
முகம்மது சொஹையில் எனும் அந்த ஆடவர் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில், போலியான இளங்கலைப் பட்டச் சான்றிதழை  அவர் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார். -

திருச்சி: திருச்சி புற­ந­கர் போலி­சார் சல்மா, 30, என்­னும் பங்­ளா­தேஷ் பெண்ணை நேற்று முன்­தி­னம் கைது செய்­த­னர். தீவி­ர­மாக நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில் பணத்­துக்­காக சென்னை தொழி­ல­தி­பர் கடத்­தப்­பட்ட வழக்­கில் கைதான தௌஃபிக் என்­ப­வ­ரின் மனைவி இவர் என தெரிய வந்­தது.

தௌஃபிக்கை போலி­சார் தேடி­ய­போது சல்மா மனைவி என்­ப­தும் பங்­ளா­தே­ஷில் இருந்து திருச்சி வந்து சட்­ட­வி­ரோ­த­மாக தங்கி இருந்­த­தும் தெரிய வந்­தது. தௌஃபிக் பிடி­பட்ட பின்­னர் சல்­மா­வைத் தேடும் பணி தொடர்ந்­தது.

இறு­தி­யாக மணி­கண்­டம் என்ற பகு­தி­யில் கந்­த­சாமி உடை­யார் தெரு­வில் ஒரு வீட்­டில் இரு வயது ஆண் குழந்­தை­யு­டன் புதன்­கி­ழமை இரவு போலி­சி­டம் சல்மா சிக்­கி­னார்.

கடந்த ஐந்து மாதங்­க­ளாக இந்த வீட்­டில் சல்மா தங்கி இருந்­த­தாக விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. ஆனால் அவர் இந்­தி­யா­வுக்­குள் வந்­த­தற்­கும் தங்கி இருப்­ப­தற்­கும் சட்­ட­பூர்வ ஆவ­ணங்­கள் எது­வும் அந்­தப் பெண்­ணி­டம் இல்லை. சல்­மா­வும் அவ­ரது குழந்­தை­யும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

அங்கு அவ்­வி­ரு­வ­ருக்­கும் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. பின்­னர் நேற்­றுக் காலை நீதி­மன்­றம் கொண்டு செல்­லப்­பட்ட சல்மா விசா­ர­ணைக்­குப் பின்­னர் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். அவர் மீது வெளி­நாட்­டி­னர் தொடர்­பு­டைய சட்­டப்­பி­ரி­வின் கீழ் வழக்­குத் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக போலி­சார் கூறி­னர்.