மதுபானம் கொடுத்து 15 வயது சிறுமியை சீரழித்த மூன்று ஆடவர்கள் சிறையில் அடைப்பு

மதுபானம் கொடுத்து 15 வயது சிறுமியை சீரழித்த மூன்று ஆடவர்கள் சிறையில் அடைப்பு

1 mins read
74c5152a-9b3b-4744-a63a-37577fa36f70
முகம்மது சொஹையில் எனும் அந்த ஆடவர் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில், போலியான இளங்கலைப் பட்டச் சான்றிதழை  அவர் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தார். -

திரு­வண்­ணா­மலை: திரு­வண்­ணா­மலை மாவட்­டம் வந்­த­வாசி இந்­திரா நக­ரைச் சேர்ந்த 15 வயது சிறு­மி­யி­டம் கீழ்­சாத்­த­மங்­க­லத்­தைச் சேர்ந்த இலி­யாஸ் என்­ப­வர் ஃபேஸ்புக் வழி­யாக நட்பு ஏற்­ப­டுத்­தி­னார். கடந்த ஜூலை மாதம் சிறு­மியை வந்­த­வாசி புற­வ­ழிச்­

சா­லைக்கு அழைத்­துச் சென்ற இலி­யாஸ், அவரை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தா­கக் கூறப்­படு­கிறது.

மேலும் தனது நண்­பர்­க­ளான சூர்யா, பர்­கத் ஆகி­யோ­ருக்­கும் இளை­ஞர் இலி­யாஸ் தக­வல் தெரி­வித்­துள்­ளார். மூன்று பேரும் சிறு­மிக்கு மது­பா­னத்­தைக் கொடுத்து பாலி­யல் வன்­கொ­டு­மை­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து சிறு­மி­யின் பெற்­றோர் அளித்த புகா­ரின்­பே­ரில் இலி­யாஸ், சூர்யா, பர்­கத் ஆகி­யோரை போலி­சார் கைது செய்­த­னர். இந்த நிலை­யில், மாவட்ட ஆட்­சி­யர் உத்­த­ர­வின்­பே­ரில் மூன்று பேர் மீதும் குண்­டர் தடுப்பு சட்­டத்­தின்­கீழ் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.