நீட் தேர்வுகளை நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுகளை நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

2 mins read
12796f69-8d16-4804-96c4-499ec0d2e042
-

சென்னை: 'நீட்', 'ஜெஇஇ' தேர்வுகளை ரத்து செய்யக் கோரி நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்க மத்திய பாஜக அரசு நடத்தும் 'நீட்', 'ஜெஇஇ' தேர்வுகளை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட தலைவர் திரு நகர் பெரியசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டாக்டர் கே.ஐ. மணிரத்தினம் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சி.டி. மெய்யப்பன், மாநில பொதுச் செயலாளர் கீழானூர் ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ராஜாஜி சாலை, சுங்கத்துறை அலுவலகம் அருகில் நடைபெற்றது.

வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான உ. பலராமன், மாநில பொதுச் செயலாளர்கள் கே. சிரஞ்ஜீவி, டி. செல்வம் ஆகியோர் முன்னிலையில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. வீரபாண்டியன் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொன். கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் புரசைவாக்கம் தொலைபேசி இணைப்பகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அடையார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஆர். தாமோதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.