தமிழகத்தில் கொவிட்-19 உயிரிழப்பு 7,000ஐ கடந்தது; புதிதாக 5,996 பேருக்குத் தொற்று

தமிழகத்தில் கொவிட்-19 உயிரிழப்பு 7,000ஐ கடந்தது; புதிதாக 5,996 பேருக்குத் தொற்று

1 mins read
69be6801-c761-49fd-9246-fb6e14feb344
-

தமிழ்நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்துவரும் நிலையில் நேற்று 102 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையைச் சேர்த்து மொத்தம் 7,050 பேர் இதுவரை தமிழ்நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று புதிதாக 5,996 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையில் மட்டும் 1,296 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 5,752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் இதுவரை 349,682 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 52,506 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.