காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம்; தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம்; தலைவர்கள் இரங்கல்

2 mins read
e2f3468d-1ca0-497b-81fb-63364a0529b8
இரண்டு முறை தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.படம்: டுவிட்டர் -

சென்னை: கன்­னி­யா­கு­மரி மக்­கள வைத் தொகுதி உறுப்­பி­ன­ரும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் மாநி­லச் செயல் தலை­வ­ரு­மான எச்.வசந்­த­குமாா், 70, (படம்) வெள்­ளிக்­கி­ழமை இரவு கால­மானாா்.

தியா­க­ராய நகர் இல்­லத்­தில் வைக்­கப்­பட்ட அவ­ரது உட­லுக்கு ஏரா­ள­மானோர் கண்­ணீர்­மல்க அஞ்­சலி செலுத்தினர்.

இதன்­பின், வசந்­த­கு­மா­ரின் சொந்த ஊரான கன்­னி­யா­கு­மரி அருகே உள்ள அகஸ்­தீஸ்­வ­ரத்­தில் அவ­ரது உடல் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது.

கிரு­மித்­தொற்று பாதிப்­பால் சென்னை அப்­பல்லோ மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று உடல்­நலம் தேறி வந்­த­வர், நிமோ­னியா காய்ச்­சலால் காலமானார்.

அவ­ரது மறை­வுக்கு அதி­பர், பிர­த­மர், முதல்­வர் உள்­ளிட்ட அர­சி­யல் கட்­சித்­த­லை­வர்­கள் பல­ரும் இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.

காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது இரங்­கல் செய்தியில், "தொழில்­ மு­னை­வ­ரா­கவும் அர­சி­யல்­வா­தி­யா­க­வும் நிரப்பமுடி­யாத வெற்­றி­டத்தை வசந்­த­கு­மார் விட்டுச் சென்­றுள்­ளார். அவ­ரது பொதுச்சேவை­யும் நலத்­திட்ட உத­வி­களும் பல பேரின் வாழ்க்­கையை மாற்­றி­யது. தமி­ழ­கத்­தி­லிருந்து ஒலித்த மிக முக்­கி­ய­மான குரல்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதே­போல், தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, "ஏழை எளிய மக்­க­ளின் கல்வி, பொருளாதார வளர்ச்­சிக்கு அரும்­ப­ணி­கள் ஆற்­றிய வசந்­த­கு­மாரின் மறைவு காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ருக்­கும் தொகுதி மக்­க­ளுக்­கும் பேரி­ழப்பு," எனத் தெரி­வித்­துள்­ளார்.

ஹெச்.வசந்­த­கு­மார் மறை­வுக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் ஒரு வாரம் துக்­கம் கடைப்­பி­டிக்­கப்­படும் என தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி அறி­வித்­துள்­ளார். இதன்­படி, கட்சி நிகழ்ச்­சி­கள் ரத்து செய்­யப்­பட்டு, கட்­சிக் கொடி­கள் அரைக்கம்­பத்­தில் பறக்­க­வி­டப்­படும் என்றும் அவர் கூறி­யுள்­ளார்.

மநீம தலை­வ­ர் கமல்­ஹா­சன், நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட் டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வசந்தகுமாரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. வணிகம், சமூகசேவையில் அவர் பங்கு அளப்பறியது. தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதில் அவரது இலக்கு இருந்தது.

தம்பி மறைவால் அதிர்ந்த அண்ணன்

மருத்துவமனையில்

சென்னை: தனது தம்பி எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோ தரரும் கங்கிரஸ் மூத்த தலை வருமான குமரி அனந்தன் ஹைத ராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது... ஆளு நராக இருந்தாலும் அண்ணன் குமரி அனந்தனின் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்," என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வசந்தகுமாருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் நடிகா் விஜய் வசந்த், வினோத்குமாா் என்ற இரு மகன்களும் தங்கமலா் என்ற மகளும் உள்ளனா். எளிய குடும் பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னுக்கு வந்தவா். தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருள்களை கொடுக்கும் 'வசந்த் அண்ட் கோ' நிறுவனத்தை 1978ல் தொடங்கினாா். 64 இடங்களில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.